நீங்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றி உயர்தரத்துக்கு தகுதி பெறாத ஒருவரா…..?

அல்லது, வேலைவாய்ப்பு உத்தரவாதம் குறைவான கலைத்தறைப் பாடநெறிகளைத் தொடர்பவரா…..?

அல்லது, ஏதாவது ஒரு துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிட்டாதவரா……?

அல்லது, பட்டக்கல்வியை நிறைவுசெய்தும் வேலைவாய்ப்புப் பெறமுடியாமல் திண்டாடுபவரா…….?

நீங்கள் எத்தகைய கல்வித் தகைமையைக் கொண்டவராக இருந்தாலும், உங்களுக்த் தேவை கவர்ச்சிகரமான சம்பளத்துடனான ஒரு வேலைவாய்ப்பு… அப்படித்தானே…………..?

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்(Tourism and Hospitality Management) மற்றும் வர்த்தகக் கற்கைத் துறைகளில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய தொழில் மையமான கற்கைநெறிகளை வழங்கிவரும் வடக்கின் முன்னோடி நிறுவனமான சிகரம் அக்கடமி, ஒளிமயமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் பொருத்தமான வேலைவாய்ப்புத் தீர்வுகளைப் பெற்றுத்தருகிறது.

2009ம் ஆண்டு போர் முடிவுற்ற பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2016ம் ஆண்டு 20 இலட்சத்து 50ஆயிரம் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2017இல் இந்த எண்ணிக்கையை 25 இலட்சமாக உயர்த்தவும், 2020இல் இன்னும் அதிகமாக 45 இலட்சம் உல்லாசப் பயணிகளை இலங்கைக்கு வரச்செய்வதற்கும் இலங்கை சுற்றுலாத்துறை திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது.

இவ்வாறு மில்லியன் கணக்கில் இலங்கை வரவுள்ள இந்த உல்லாசப் பயணிகளை இலக்கு வைத்து அதிகரித்த எண்ணிக்கையில் புதிய உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச விடுதிகள் இலங்கையில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த உல்லாச விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவையாற்றுவதற்கு 2 இலட்சத்து 50ஆயிரம் வரையிலான பயிற்சிபெற்ற பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

வேலையில்லாப் பிரச்சினைக்கு அதிகளவு முகம் கொடுத்துள்ள வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவே. 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரினால் அதிகளவு கைத்தொழில் முயற்சிகள் அழிவடைந்து வேலைவாய்ப்புக்கள் அரிதாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, சுற்றுலாத்துறை மூலம் உருவாகியுள்ள பரந்தளவிலான இந்த வேலைவாய்ப்புக்கள் பெரும் வரப்பிரசாதமாகும்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் கற்றுத் தேறுபவர்களுக்கு மிகப் பரந்தளவிலான வேலைவாய்ப்புக்களுக்கான கதவுகள் திறக்கின்றன. உல்லாச விடுதிகள், உணவகங்கள், விமானசேவை, கப்பல் சேவை, மாநாடு மற்றும் திருமண மண்டபங்கள், பயண முகவர்சேவை, சுற்றுலா வழிகாட்டிகள் என்று பரந்து விரியும் இந்தத் துறையில் பலவிதமான தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கும் அதிகமாக, கணக்காளர், காசாளர், விற்பனை ஊக்குவிப்பாளர், வரவேற்பாளர் என்று நீளும் வர்த்தகத்துறை வேலைவாய்ப்புக்களும் சுற்றுலாத்துறையில் காணப்படுகிறது.

சுற்றுலா முகாமைத்துவம்(Tourism Management), விடுதி வரவேற்பறை முகாமைத்துவம்(Front Office Management), உணவு மற்றும் குடிபானவகை முகாமைத்துவம்(Food and Beverages Management), விடுதி பராமரிப்புச் சேவை(Housekeeping), சமையல் கலை(Culinary Arts), விற்பனை முகாமைத்துவம்(Marketing Management), வியாபார முகாமைத்துவம்(Business Management) போன்ற துறைகளில் திறம்பட பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்துடனான ஏராளம் வேலைவாய்ப்புக்கள் இந்தத் துறைகளில் காத்திருக்கின்றன.

மேற்சொன்ன துறைகளில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடனான ஆழமான பயிற்சிகளை சிகரம் அக்கடமியினராகிய நாம் வழங்கி வருகிறோம். சிகரம் அக்கடமியை நாடிவரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும், அவரவரது ஆற்றலுக்குப் பொருத்தமான துறைசார் வேலைவாய்ப்பைத் தெரிவுசெய்வதற்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு ஆரம்பத்தில் வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஒவ்வொருவரும் தமக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை இனங்கண்டு, தமது பலவீனங்களையும், எதிர்கொள்ளும் சவால்களையும் வென்று தம்மைச் சுற்றி இருக்கின்ற வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வல்லமையைப் பெறுகிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தமது எதிர்காலம் தொடர்பான கனவுகள் கைகூடுவதை உறுதிப்படுத்தும் வகையில் சரியானதொரு இலக்கை திட்டமிடவும், அதை வெற்றிகொள்வதற்கான வழிவகைகளை இனங்காணவுமான பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆங்கிலத் தொடர்பாடலில் பலவீனமான மாணவர்களுக்கு அவர்களிடம் இருக்கும் ஆங்கில மொழி தொடர்பான அச்சத்தை நீக்கி ஆங்கிலத் தொடர்பாடலில் தேர்ச்சிபெறச் செய்யும் விசேட பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக வழங்கப்படும் விருந்தோம்பலுக்கான ஆங்கிலக் கற்கைநெறி மூலம் விருந்தோம்பல் தொழிற்துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான ஆங்கில தொடர்பாடல் திறன்களை மாணவர்கள் பெறுகிறார்கள்.

தொடர்ந்து, அவரவர் தமக்குப் பொருத்தமானது எனத் தெரிவுசெய்யும் தொழில் நிலைகளுக்கு ஏற்ப, சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் வர்த்தகத் தொழிற்துறைகளில் எதிர்பார்க்கப்படும் திறன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான பயிற்சிகள் சிகரம் அக்கடமியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. எமது விரிவுரையாளர்களும் தொழிற்துறை சார்ந்தவர்களாக இருப்பதால், அந்தந்தத் துறைகளில் எதிர்பார்க்கப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தயார்ப்படுத்தப்படுகிறார்கள்.

தொழிற்றுறை மையங்களுக்கான நேரடி பயணங்கள், தொழிற்றுறை முன்னோடிகளின் வருகைதரு விரிவுரைகள், சுற்றுலா மையங்களுக்கான விசேட பயணங்கள், வருமானத்துடன் கூடிய பணியிடப் பயிற்சிகள், உணவகம், சுற்றுலாப் பயண வழிகாட்டி சேவை போன்ற சிகரம் அக்கடமி முன்னெடுக்கும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்துறை வர்த்தக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கேற்பு என பல வகையிலான வழிமுறைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள எமது பயிற்சிநெறிகள் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமான கற்கை அனுபவத்துடன் கூடிய தொழிற்றுறை தேர்ச்சியை வழங்குகிறது. தொழிற்றுறை முன்னோடி நிறுவனங்களுடன் எமக்கிருக்கும் நெருக்கமான உறவு காரணமாக, எமது மாணவர்கள் தாம் கற்றுக்கொண்ட திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலான வருமானத்துடன் கூடிய பணியிடப் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

சிகரம் அக்கடமியில் பயிற்சிபெறும் மாணவர்கள் மிகவும் உற்சாகமானவர்களாக, புத்தாக்கச் சிந்தனை மிக்கவர்களாக, தாம் பயிற்சிபெற்ற தொழிற்றுறை தொடர்பான சரியான மனோபாவம் கொண்டவர்களாக உருவாக்கப்படுகிறார்கள். தொழிற்றுறையில் பிரகாசிப்பதற்கு அவசியமான அறிவையும், பயிற்சிகளையும் பெறும் இந்த மாணவர்கள் தொழிற்பணிக்கு எப்போதும் தயாரான ஆற்றல் மிக்கவர்களாக காணப்படுகிறார்கள். அதனால்தான் எம்மிடம் பயிற்சிபெறும் 100 சதவீதம் மாணவர்களும் முன்னணி உல்லாச விடுதிகளில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள்.

மருத்துவம், பொறியியல், கணக்கியல், ஆசிரியத்தொழில் என்று ஒரு சில துறைகளை மட்டுமே இலக்காகக் கொள்ளாது, இவற்றுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத, பரந்தளவு வாய்ப்புக்களை வழங்கும் சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் வர்த்தகத்துறை போன்றவற்றுடன் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக்கொண்டால் வேலையில்லாப் பிரச்சினையால் திண்டாடி மனவிரக்திக்கு உள்ளாகவேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படாது. க.பொ.த. சாதாரணதரம் அல்லது உயர்தரத்தில் கவர்ச்சியான பெறுபேறுகளைப் பெற்றிருந்தாலும், இல்லாவிட்டாலும்கூட இந்தத்துறையை நீங்கள் தெரிவுசெய்து, உங்களோடு கல்வி கற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கு முன்னதாகவே நீங்கள் நல்ல வருமானத்துடனான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டுவிடலாம்.

உங்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்……..?

சிகரம் அக்கடமியில் இணைந்து உங்கள் தொழில் திறன்களையும் ஆங்கில அறிவையும் விருத்தி செய்யுங்கள்.

6 மாத காலப் பகுதிக்குள் முன்னணி ஹொட்டேல் ஒன்றில் இணைந்து கைநிறையப் பணம் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.