SIKARAM ACADEMY, School of Hospitality ஹொட்டேல் பயிற்சிக் கல்லூரியில் தமது பயிற்சிகளை நிறைவுசெய்த மற்றுமொரு தொகுதி மாணவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் Green Grass மற்றும் Valampuri ஹொட்டேல்களில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டனர்.

Green Grass மறறும் Valampuri ஹொட்டேல்களின் உரிமையாளர் ஜெகசீலன் மற்றும் Green Grass ஹொட்டேல் Food and Beverage Manager சிவா ஆகியோரை நேரில் சந்தித்த SIKARAM ACADEMY, School of Hospitality யின் பணிப்பாளர் கோ.றுஷாங்கன், கற்கைநெறி ஒருங்கிணைப்பாளர் செல்வி துவாரகா மற்றும் பயிற்சி உதவியாளர் கீர்த்த்னா ஆகியோர், பயிற்சிநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒழுங்குகளை உறுதிப்படுத்தினர்.

ஏற்கனவே Green Grass மற்றம் Valampuri ஹொட்டேல்களில் பணியாற்றிவரும் SIKARAM ACADEMY, School of Hospitality ஹொட்டேல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி நிறைவுசெய்த மாணவர்களுடன் இணைந்து இந்த மாணவர்களும் தமது பணிகளைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகரம் ஹொட்டேல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்ற பல மாணவர்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கும் Jetwing மற்றும் Thinnai ஹொட்டேல்களில் இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.