11 வயதில் தந்தையாரை இழந்து க.பொ.த. சாதாரணதரத்துக்கு மேல் படிப்பதற்கு போதிய வசதியற்று இருந்து,
தன் அண்ணா ஒருவரின் உதவியால் கொழும்பு சென்று கணக்காளர் நிறுவனம் ஒன்றில் 35 ரூபா சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து,இரண்டு வருடங்களின் பின்னர் ஒபரோய் ஹொட்டேலில் இரவுக் கணக்காளராக இணைந்து,

பின்னர் வேறோர் ஹொட்டேலில் இணைந்து பணியாற்றி,அதன்பின்பு பாஃரேன் நாட்டு ஹொட்டேல் ஒன்றில் வேலைபெற்றுச் சென்று,தொடர்ந்து குவைத், கட்டார், ஓமான், யேமன், நைஜீரியா, பொஸ்வானா என்று 15க்கு மேற்பட்ட நாடுகளில் ஹொட்டேல்களில் பணியாற்றி,குறிப்பாக சர்வதேச புகழ்பெற்ற Sheraton Hotel வலைப்பின்னலில் பிரதான கணக்காளராக இருந்து பொது முகாமையாளராக உயர்ந்து இப்போது ஓய்வுபெற்றவரான…..

யாழ்ப்பாணம் கைதடி மண்ணின் மைந்தன் விக்கி சுப்பிரமணியம்,வடக்கு மாகாண இளைஞர்கள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் இணைந்து பொருளாதார ரீதியாக தம்மை உயர்த்திக்கொள்ளும் வழிவகைகள் குறித்துத் தரும் ஆலோசனைகள்…..